Latestமலேசியா

40 ஆண்டு கால சேவைக்கு – ரிம. 10 அதிகரிப்பா? குணசேகரன் அதிருப்தி

கோலாலம்புர், செப். 19 – தலைநகர், டாத்தாரான் மெர்டேக்காவில் உள்ள மணிக்கூண்டை 40 ஆண்டு காலம் பராமரித்து வந்த வி.குணசேகரனுக்கு வெறும் ரிம. 10 சம்பள உயர்வை அளித்து அவமானப் படுத்தியிருக்கக் கூடாது என கண்டனங்கள் பெருகி வருகின்றன.

தமது 20 ஆண்டு கால பராமரிப்புப் பணியில் விடுப்பு எடுக்க முடியாத குணசேகரன், சில சமயங்களல் வீட்டுக்குப் போக முடியாமல் அங்கேயே படுத்துறங்கியும் உள்ளார். முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தால், காலை 3 மணிக்கே தமது வேலையைத் தொடங்கி எல்லாம் சரியாக இருக்கின்றதா என்பதை பரிசோதிப்பார்.

2016இல் தமக்கு குறைந்த சம்பள உயர்வே அளிக்கப்பட்டதில் அவர் பெரும் அதிருப்தி அடைந்துள்ளார். தாம் ஓய்வு பெறுவதற்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது வெறும் ரிம. 10 வெள்ளி மட்டுமே சம்பள உயர்வு கொடுக்கப் பட்டதாகவும் அது மாதத்துக்கு 80 காசுகள் மட்டுமே என குறிப்பிட்ட அவர், 42 ஆண்டுகள் சேவைக்கு அளிக்கப்பட்ட மாபெரும் பரிசா என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தம்மோடு வேலை செய்த சிலருக்கு 90 ரிங்கிட் சம்பள உயர்வு அளிக்கப் பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1975இல் குணசேகரன் வேலைக்குச் சேரும்போது ரிம. 146ஐ சம்பளமாகப் பெற்று, மூன்றாண்டுக்கு முன்னர் ஓய்வு பெறும்போது, ரிம. 2,700ஐ பெற்றிருக்கிறார்.

தமது பணிக் காலத்தில் சிறந்த சேவைக்கான 9 விருதுகளைப் பெற்றிருப்பதாகவும், 40 ஆண்டு காலத்தில் ஒரு சொந்த வீட்டைக் கூட வாங்க முடியாத அவர், பல முறை மலிவு விலை வீட்டுக்கு விண்ணப்பித்திருந்த போதும் இது வரை, அது கிடைக்கவே இல்லை என வருத்தத்தோடு குறிப்பிடுகிறார்.

நாட்டுக்கான எனது சேவைக்கு சிறிதளவே கேட்பதாகவும், அதைக் கூட கொடுக்க மனம் இல்லாதவர்களாக சர்வே இலாகாவின் அதிகாரிகள் இருப்பதாக அவர் தமது ஆதங்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker