Latestமலேசியா

நீதிபதியை மாற்ற வேண்டும்- கூ நானின் மனு தள்ளுபடி

கோலாலம்பூர், செப். 20- தமது ஒரு மில்லியன் ஊழல் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டுமென்ற முன்னாள் அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் மனு உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

தமக்கு ஒரு 10 லட்சம் ரிங்கிட் லஞ்சம் கொடுத்த தொழிலதிபர் டான் எங் பூனுக்கு நீதிபதி நஸ்லான் 15 லட்சம் ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளதாகவும், அதே நீதிபதி தமது வழக்கை செவிமடுப்பதாகவும், அபராதம் விதிக்கப்பட்ட டான் தமது வழக்கிலும் ஒரு சாட்சியாக இருக்கும்போது தமக்கு நீதி கிடைக்காது என தெங்கு அட்னான் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் மனுவை நிராகரித்த நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி, தீர்ப்பு சாட்சியங்களின் ஆதார அடிப்படையில் வழங்கப்படுவதால் அதில் பாரபட்சம் காட்டப்படாது. பாரபட்சம் காட்டப்படும் எனும் ஆதாரத்தை தெங்கு அட்னான் நிரூபிக்கவில்லை என்றும், நீதிமன்ற நிலையாணையின் வழி, வழக்கு சம்பந்தமாக மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தாலும், வழக்கின் விசாரணையை நிறுத்த அவசியம் இல்லையென குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker