Latestஉலகம்

டில்லி டாக்சியில் ஆணுறை வைத்திருக்க உத்தரவு

புதுடெல்லி, செப் 21 – டில்லியில்  டாக்சி ஓட்டிகள் தங்களது வாகனத்தில் உள்ள முதலுதவிப் பெட்டிகளில் அவசர சிகிச்சைக்காக ஆணுறை வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டனர்.

காயத்திற்கு கட்டு போடக்கூடிய  பேண்டேஜ்,  புண்களில் கிருமிகள் பரவுவதை தடுக்கும்  மருந்து, மற்றும் இதர அவசர மருந்துகளுடன் ஆணுறையையும் கட்டாயமாக முதலுதவிப் பெட்டியில் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

விபத்துக்கள் ஏற்படும்போது உடலில் இருந்து ரத்தம் வெளியேறினால் அவற்றை உடனடியாக  நிறுத்துவதற்கு  ஆணுறை முக்கிய பங்காற்ற முடியும் என்பதால் தங்களது முதலுதவிகள் இதர முக்கிய மருந்து பொருட்களுடன் அதனையும் வைத்திருக்கும்படி டிரைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

டாக்சியில் பயணம் செய்யும்போது ஏற்படும் விபத்துக்களால் பயணிகளுக்கு வெட்டுக்காயம் அல்லது எலும்பு முறிவு ஏற்பட்டால் உடனடியாக ஆணுறையை பயன்படுத்தி ரத்தத்தை நிறுத்த முடியும் என டெல்லியை சேர்ந்த வாகன ஓட்டுனர் சங்கத்தின் தலைவரான கமல்ஜீத் கில் தெரிவித்தார் .

அதேபோன்று எலும்பு முறிவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இறுக்கமாக  சுற்ற வேண்டும்.  இதன் மூலம் வலியையும் குறைக்க முடியுமென கில் கூறினார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker