Latestஇந்தியா

துர்கா பூஜையையொட்டி பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்!

கொல்கத்தா,செப்.21- மேற்கவங்கத்தில் துர்கா பூஜை பண்டிகையையொட்டி அம்மாநில முதல்வர் மம்தா கட்சியை சேர்ந்த இரு பெண் எம்.பி.க்களின் அசத்தலான நடன நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் நவராத்திரியைப் போன்று மேற்குவங்கத்தில் ஆண்டு தோறும் பிரசித்தி பெற்ற துர்கா பூஜை கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ள இப்பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டாட அம்மாநில மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நிறுவனம் , துர்கை அம்மனுக்கு வணக்கம் செலுத்தும் பக்தி பாடலை உருவாக்கி பாடலுக்கு மேற்குவங்க நடிகைகளும், திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களான நுஸ்ரத் ஜஹான், மிமி சக்ரபர்த்தி ஆகிய இருவரின் நடன நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நடன நிகழ்ச்சியில் இரு பெண் எம்.பி.க்களும் நளினத்துடனும், அபிநயத்துடனும் ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நடனத்தை பார்த்து பரவசமடைந்து ‛லைக்’ செய்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker