Latestமலேசியா

நாளை ஐ.பி.எப் தேசிய பேராளர் மாநாடு- அகமட் ஸாஹிட் ஹமிடி தொடக்கி வைப்பார்

.கோலாலம்பூர்     செப் 17ஐ.பி.எப் கட்சியின் தேசிய பேராளர் மாநாடு நாளை செப்டம்பர் 22ம் தேதி ஐ.பி.எப் தலைமையகத்தில்  டான்ஸ்ரீ எம்.ஜி பண்டிதன்  மண்டபத்தில் நடைபெறும். தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைவரானடத்தோ அகமட் ஸாஸிட் ஹமிடி  இந்த   பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார். 800க்கும் மேற்பட்ட பேராளர்களுடன் பார்வையாளர்களும்  இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

கடந்த வாரம், ஐ. பி .எப். கட்சியின் தேசிய தலைவராக  செனட்டர் டத்தோ எம். சம்பந்தன் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஐ.பி.எப் கட்சியின் தலைவர், துணைத்தலைவர்,உதவித் தலைவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள்,  இளைஞர்  மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பாளர் பதவிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் காஜாங்கிலுள்ள தங்கும் விடுதியில் நடைபெற்றது. கட்சியின் தலைவராக  செனட்டர் டத்தோ சம்பந்தன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் இதர பொறுப்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.துணைத்தலைவராக  டத்தோ லோகநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார் .ஐந்து உதவி தலைவர்களாக பினாங்கைச் சேர்ந்த ஏழுமலை , கெடாவைச் சேர்ந்த வேலாயுதம், சிலாங்கூரின் ராஜேந்திரன், நெகிரி செம்பிலான்  விஸ்வநாதன்,பேராவைச் சேர்ந்த அப்பளசாமி  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேலும் இளைஞர் பிரிவின் புதிய தலைவராக கணேஷ்குமார் டத்தோ சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் மகளிர் பிரிவுத் தலைவி பதவியை ராஜம்மா பெருமாள் தற்காத்துக் கொண்டார். இதுதவிர கட்சியின் மத்திய  செயலவைக்கு இதர 17 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker