Latestஉலகம்

நேபாளம் பசுபதிநாத் கோவிலில் மர்ம பொருள் கண்டெடுப்பு!

காட்மண்டு,செப்.21 -நேபாள தலைநகர் காட்மண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோவிலில் சந்தேகத்திற்கிடமான மர்ம பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.இந்நிலையில் அந்த கோவிலின் வெளி வளாகத்தில்  அப்  பொருள் கண்டெடுக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள் வெடிகுண்டா அல்லது வேறு எதுவுமா என்பது குறித்து நேபாள ராணுவத்தினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து  பசுபதிநாத் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாள் தோறும் பல்லாயிரம் மக்கள் வந்து செல்லும் இந்த கோவில் நேபாள நாட்டின் மிக முக்கிய இடங்களில் ஒன்றாகும்.உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான காட்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றின் கரையிலுள்ள இக்கோவில் சிவனுக்கான ஒரு கோவிலாகும். இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker