Latestமலேசியா

ரவாங் துப்பாக்கி சூடு; மரண விசாரணை நடத்தப்படும் – ஐ.ஜி.பி

கோலாலம்பூர், செப் 21 – ரவாங் பத்து ஆராம்க்கில் கடந்த சனிக்கிழமை போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டது தொடர்பில் மரண விசாரணை நடத்தப்படும் என போலீஸ் படைத் தலைவரான அப்துல் ஹமிட் படோர் கூறியுள்ளார்.

மரண விசாரைணக்கு அமைச்சரவை அனுமதி வழங்கி இருப்பதால் சாத்தியமான விரைவில் அந்த நடவடிக்கையை தொடங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மரண விசாரணையை நாங்கள் வரவேற்கிறோம். இந்த விசாரணையின்போது எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும் என அப்துல் ஹமிட் கூறினார்..

செப்டம்பர் 14 ஆம் தேதி விடியற்காலை 5 மணி அளவில்
ரவாங் பத்து ஆராங்கில் போலீசார் மேற்கொண்ட ஒரு சோதனை நடவடிக்கையின்போது ஜனார்தனன், தவசெல்வம் மகேந்திரன் ஆகியோர் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவர்களில் ஜனார்தனன் இலங்கை பிரஜையாவார். தனது மனைவி மோகனாம்பாள் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ஆகஸ்ட் 27ஆம் தேதி மலேசியாவுக்கு வந்தார் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியாகி இருப்பதை தாம் அறிந்திருப்பதாகவும் ஐ.ஜி.பி அப்துல் ஹமிட் கூறினார். இந்தக் குற்றச்சாட்டைக் கூறியவர்கள் அனைவரும் மரண விசாரணையின்போது அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker