Latestமலேசியா

அந்நியத் தொழிலாளர்கள்- சொந்த நாட்டுக்கு அனுப்பும் பணம் ரிம். 500 கோடியாகும்

கூச்சிங், செப். 22 – நாட்டில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் ஆண்டு ஒன்றுக்கு 500 கோடியைச் சொந்த நாடுக்கு அனுப்புகின்றனர்.

மலேசிய கட்டுமானத் தொழில்துறை மேம்பாட்டு அமலாக்கத்துறை(சிஐடிபி) யின் தலைமை நிர்வாகி அகமட் அஸ்ரி, நாட்டில் பதிவு பெற்ற அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் 420,000 பேர் இருப்பதாகவும் அவர்கள் மாதமொன்றுக்கு ரிம. 1000ஐச் சொந்த நாட்டுக்கு அனுப்பினால், அது ஆண்டொன்றுக்கு 500 கோடி ரிங்கிட்டாக இருக்கும் என தெரிவித்தார்.

இளைஞர்கள் ஆபாயகர, அழுக்கான, கடினமான வேலைகளைச்செய்ய விரும்பாமல் பின் வாங்குதால், அந்நிய நாட்டவர்கள் அந்த வேலைகளைச் செய்கின்றனர்.

இங்கு கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதியை சொந்த நாட்டிற்கு அனுப்பி வருகின்றனர்.

நமது இளைஞர்கள் அந்த வேலைகளைச் செய்ய முன் வந்தால், அந்த இழப்பைத் தவிர்க்க முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker