Latestமலேசியா

இறுதிச்சடங்கில் பங்கேற்க மோகனாம்பாளை போலீஸ் அழைத்து வரவேண்டும் குடும்பத்தினர் கோரிக்கை

கோலாலம்பூர்  செப் 22-போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமது கணவர் ஜனார்தனன் மற்றும் சகோதரர் தவசெல்வம் ஆகியோரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு மோகனம்பாளை போலீசார் அழைத்து வரவேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இவ்விருவரின் இறுதிச் சடங்கு  நாளை திங்கட்கிழமை ஒரு மணி அளவில் செலயாங்கிலுள்ள அவர்களது இல்லத்தில் நடைபெறவிருக்கிறது.

இம்மாதம் 14ஆம் தேதி விடியற்காலை 5 மணி அளவில் ரவாங் பத்து ஆராங்கில் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒரு காரில் இருந்த ஜனார்த்தனன்,

தவசெல்வம், மகேந்திரன் ஆகியோரை சுட்டுக் கொன்றதாக போலீசார் அறிவித்தனர். இலங்கை  பிரஜையான  ஜனார்தனன் , தவசெல்வம்  மகேந்திரன் ஆகிய மூவரும்  கொள்ளை மற்றும் குண்டர் கும்பலில் சம்பந்தப்பட்டதாகவும்  இவர்கள் சென்ற  காரை  துரத்திச் சென்ற பின்னர்  அவர்களை  சுட்டுக்கொன்றதாக ஏற்கனவே சிலாங்கூர் போலீஸ் தலைவர்  நோர் அஷாம் அறிவித்திருந்தார்.

அதோடு  அக்காரில் இருந்த ஜனார்தனனின் மனைவி மோகனம்பாள் காலில் துப்பாக்கிச்சூட்டு காயத்திற்கு உள்ளானதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதுவரை மோகனம்பாள் என்ன ஆனார் என்பது குறித்து எந்த ஒரு விவரமும் தெரியவில்லை. அவர் என்ன ஆனார் என்பது  ஒரே மர்மமாக இருக்கிறது .

இந்த நிலையில் ஜனார்தனன் மற்றும் தவசெல்வம் ஆகியோரின் உடல்களை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

இவர்களது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மோகனம்பாளை போலீசார் அழைத்து வரவேண்டும் என அவரது குடும்பத்தின் வழக்கறிஞரான மனோகரன் மலையாளம் கோரிக்கை விடுத்தார். மோகனம்பாள் எங்கே இருக்கிறார் என்பது போலீசிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும் .

அல்லது போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தனது கணவர் மற்றும் சகோதரரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு அவரை போலீசார் அழைத்து வரவேண்டுமென மனோகரன் கேட்டுக்கொண்டார்.

அப்படி இல்லாவிட்டால் மோகனம்பாள் எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து அவரது கணவரின் இறுதிச்சடங்கு நடைபெறுவதற்கு முன்னதாக கொண்டுவர வேண்டுமென மனோகரன் வலியுறுத்தினார்.

தமது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பிரிட்டனில் இருந்து கடந்த மாதம் மோகனம்பாள் இங்கு வந்தார்.  கணவர் ,சகோதரர் மற்றும் குடும்ப நண்பருடன் அவர்கள் இரவு உணவு உட்கொள்ள சென்றதாகவும்  அவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிக்கலாம் என மோகனம்பாளின் குடும்பத்தினர் கூறி வருகின்றனர் . இது குறித்து ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் போலீசில் புகார் செய்துள்ளனர்

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker