Latestமலேசியா

இலவச இ-விசா: ரஷ்யா அறிவிப்பு

செயின்ட் பீட்டர்ஸ்பர்க், செப். 22 – அக்டோபர் 1 முதல் ரஷ்யா தனது இலவச இ-விசாவை 53 நாடுகளுக்கு அறிமுகப் படுத்துவதாக அறிவித்துள்ளது.

சுற்றுப் பயணத்தின் மூலம் தனது வருமானத்தைப் பெருக்குவதற்கு ரஷ்யா அத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.

இ-விசாவின் மூலம் விசா பெற்றவர்கள் லெனின்கிரேடின் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கையும் அதைச் சார்ந்த இடங்களையும் சுற்றிப் பார்க்க முடியும்.

ரஷ்யா செல்வதற்கு 3 நாளைக்கு முன்னதாகவே அதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டுமென்றும் அந்த விசா 8 நாள்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.

மலேசியா, இந்தியா, சீனா, இந்தோனேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஐரோப்பிய யூனியன்நாடுகள் உட்பட அந்த இ-விசா 53 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அது மற்ற வட்டாரங்களுக்கும் படிப்படியாக விரிவு படுத்தப்படும்.

இந்த இ-விசாவானது வர்த்தகம், சுற்றுலா, மனிதாபிமான விவகாரம் போன்றவற்றிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இ-விசா இலவசமாக வழங்கப்படும் வேளையில், சாதாரண விசா 65 யூரோ(ரிம. 65) கட்டணத்தில் வழங்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker