Latestஉலகம்

இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார்!

லண்டன்,செப்.22-இங்கிலாந்து அரசியார் எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ஒருவர் தொலைக்காட்சி பேட்டியில் பரபரப்பு புகார் கூறினார்.

இங்கிலாந்து அரசியார் எலிசபெத், பிலிப் தம்பதியரின் இளைய மகன் ஆண்ட்ரூ (வயது 59). இவர் இளவரசர் சார்லஸ்சின் தம்பியும் ஆவார். இவர் சாரா என்ற பெண்ணை திருமணம் செய்து, 1996-ம் ஆண்டு பிரிந்து, விவாகரத்து செய்து விட்டார்.

அமெரிக்க பைனான்சியரும், நியூயார்க் சிறையில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டவருமான ஜெப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் வெர்ஜினியா கியுப்ரே (35). இவர் ராபர்ட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த பெண், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இவர் 2001-ம் ஆண்டு, தான் 17 வயது பருவப்பெண்ணாக இருந்தபோது இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக கூறினார். அண்ட்ரூ குளியலறையில் என்னிடம் பாலியல் ரீதியில் அணுகினார். பின்னர் என்னை படுக்கை அறைக்கு அவர் அழைத்துச்சென்று செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார். அவர் மேலும் கூறியதாவது:-

அவர் என்னுடன் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவில்லை. நன்றி சொன்னார். மென்மையான உணர்வுகளை பகிர்ந்து கொண்டு அவர் சென்று விட்டார். என்னால் அதை நம்பவே முடியவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று அவர் மறுக்கிறார். அவர் தொடர்ந்து மறுக்கத்தான் செய்வார். ஆனால் அவருக்கு உண்மை தெரியும். எனக்கும் உண்மை தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த குற்றச்சாட்டுகளை இளவரசர் ஆண்ட்ரூ மறுத்துள்ளார். வெர்ஜினியா கியுப்ரேவுக்கும் எனக்கும் எந்தவிதமான செக்ஸ் உறவும் இருந்தது கிடையாது என அவர் கூறி உள்ளார்.அவரது சார்பில் பக்கிங்ஹாம் அரண்மனை விடுத்துள்ள மறுப்பு செய்தியில், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்று சொல்லப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker