Latestமலேசியா

முகநூலில் நிந்தனை – அருணகிரிநாதன் மீது குற்றச்சாட்டு

ஈப்போ, செப். 22 – சமூக ஆர்வலர் டி.அருணகிரிநாதன் மீது இரு நிந்தனை குற்றச்சாடுகள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.

இவ்வாண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி மலாய்க்காரர்களையும் இஸ்லாத்தையும் பற்றி இழிவாக விமர்சித்து முகநூலில் பதிவேற்றிய 35 வயது அருணகிரிநாதன் மீது தொடர்பு, பல்லூடக ஆணையச் சட்டத்தின் வழி குற்றமும், அதனைத் தொடர்ந்து பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

முதல் குற்றத்துக்கு 50,000 ரிங்கிட் அபராதமும் ஓராண்டுக்கு மேற்போகாத சிறையும் இரண்டாவது குற்றத்துக்கு ஈராண்டு கால சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

அவர் அந்தக் குற்றத்தை கம்போங் ராப்பாட், பனோரோமா லாப்பாங்கான் பெர்டானா, எண். 9 எனும் இடத்தில் இவ்வாண்டு பிப்ரவரி 9ஆம் தேதி காலை 9 மணியளவில் புரிந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

10,000 ரிங்கிட் பிணையில் நீதிபதி அஸ்மான் அபு ஹசான் அவரை விடுவித்தார். அந்த வழக்கு அக்டோபர் 17ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

இதற்கு முன்னர், அருணகிரிநாதன் அரசு வழக்கறிஞர் ஃபிர்டாவுஸ் வோங்கை கொல்லப் போவதாக மிரட்டிய வழக்கை அவர் சந்தித்தார். மேலும், ஃபிர்டாவுஸ் வோங் அவர் மீது 2 மில்லியன் இழப்பீடு வழக்கையும் தொடுத்துள்ளார்.

மேலும், அவர் ஸாக்கிர் நாயக்கை முகநூலின் வழி கடுமையாகச் சாடியும், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கியை அரசியல் விவகாரம் சம்பந்தமாக கடுமையாக விமர்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker