Latestமலேசியா

அதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்

புதுடில்லி செப் 23- 2020 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு அதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர்வதற்கு மலேசிபா நடவடிக்கை எடுக்கும்.

மலேசியாவின் சுற்றுலா மையங்களையும் பல்வேறு வகையான மலேசியா கலாச்சாரம் மற்றும் உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வை புதுடில்லியில் உள்ள மலேசிய தூதரகம் நடத்தியது.

மலேசியாவின் சுற்றுலா மையங்கள் குறித்து
இந்திய பிரஜைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை அதிகரிக்கப்படும் என இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய போது இந்தியாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ ஹிடயாட் அப்துல் ஹமிட் கூறினார்.

விசா கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதோடு விசாவுக்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டதன் மூலம் அதிகமான இந்திய சுற்றுப் பயணிகள் தங்களது விடுமுறையை மலேசியாவில் கழிப்பதற்கு வருவார்கள் என அவர் சொன்னார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான பயணங்களும் கட்டம் கட்டமாக அதிகரித்துள்ளன. இந்தியாவின் 14 நகர்களிருந்து இந்தியா வாரந்தோறும் 237 விமான சேவைகளை மலேசியாவுக்கு ஏற்பாடு செய்துள்ளதையும் ஹிடயாட் சுட்டிக்காட்டினார். மலேசியாவின் சுவையை உணருங்கள் என்ற ஆறு நாள் விழாவையும் அவர் புதுடில்லியில் தொடக்கிவைத்தார்.

இந்திய சுற்றுப் பயணிகளை அதிகரிக்கும் இலக்கையும் மலேசியா கொண்டுள்ளது. அடுத்தாண்டு சுமார் 3 கோடி அனைத்துலக வருகையாளர்களை கவர முடியுமென மலேசியா நம்பிக்கை கொண்டுள்ளது. .இதன்வழி ஆண்டு சுற்றுலா வருமானமாக 100 பில்லியன் வெள்ளியை பெறும் இலக்கை எட்ட முடியும் என ஹிடயாட் தெரிவித்தார்.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 354,486 இந்திய சுற்றுப் பயணிகள் மலேசியாவுக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வருகை புரிந்த சுற்றுப் பயணிகளை ஒப்பிடுகையில் இது 15 விழுக்காட்டிற்கும் கூடுதலாகும்.

இவ்வாண்டு 730,000 இந்திய சுற்றுப் பயணிகளை கவர்வதற்கு மலேசிய சுற்றுலா துறை இலக்கை கொண்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker