Latestமலேசியா

அம்னோ-பாஸ் திருமணப் படம் – அநாகரிகமானது

கோலாலம்பூர், செப். 23 – அம்னோவும் பாஸ் கட்சியும் அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொண்டதை ஓரின திருமணமாக உருவகப்படுத்தி ஒரு சீன மொழிப் பத்திரிகை வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென அம்னோவின் தகவல் பிரிவுச் செயலாளர் சம்சுல் அனுவார் நசாரா வலியுறுத்தியுள்ளார்.

அம்மாதிரியான படத்தை வெளியிட்டது அநாகரிகமானது. நாட்டு நலனுக்காக ஏற்படுத்திக் கொண்ட கூட்டுறவைக் கொச்சைப் படுத்திய செயல் என அவர் வர்ணித்தார்.

அது அம்னோவையும் பாஸ் கட்சியையும் அவமதிக்கும் செயல். கருத்துகளை வெளியிடும்போது அது நாகரிமாகவும் பத்திரிகை தர்மத்தை மீறாமலும் வரம்போடும் இருத்தல் வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

செப்டம்பர் 19ஆம் தேதி அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடியும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் திருமணத் தம்பதியர் போன்ற புகைப்படத்தை வெளியிட்டதற்காக அந்தப் பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டுமென சம்சுல் அனுவார் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட பத்திரிகை அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker