Latestஉலகம்

ஆஸ்திரேலியாவுக்கு எபெட்ரின் போதைப் பொருள் கடத்தல் – இருவர் கைது

கோலாலம்பூ, செப். 23 – ஆஸ்திரேலியாவுக்கு எபெட்ரின் எனும் போதைப் பொருளைக் கடத்திய மலேசியர்கள் இருவர் சிட்னியில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சுற்றுலா விசாவை வைத்திருந்த 63 வயதானவர் என்றும் மற்றொருவர் மாணவர் விசாவில் சென்ற 22 மாணவராவார்.

அவர்களிருவரும் செப்டம்பர் 16இல் ஒரு கொள்கலனில் நிரப்பப்பட்ட1,266 கிலோ எபென்ட்ரினை அட்டைப் பெட்டிகளில் அடைத்து, தளவாடப் பொருள்களோடு அதைஅ மறைத்து வைத்து அனுப்புயுள்ளனர்.

அதனை மோப்பம் பிடித்த ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் படையினர், செப்டம்பர் 10இல், 127 பெட்டிகளில் அனுப்பப்பட்ட அந்தப் போதைப் பொருளை ரோஸ்லேண்ட் கிடங்கில் கைப்பற்றியதோடு, அந்த இருவரைவும் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட அந்த போதைப் பொருள் ஒரு டன் செயற்கை ஷாபுவை உருவாக்க முடியும் என்றும் அதன் சந்தை மதிப்பு 750 ஆஸ்திரேலிய டாலர்(ரிம. 210 கோடி) ஆகும்.

அவர்களிருவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செப்டம்பர் 13இல் டவுனிங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டு சிறையும் 1.05 மில்லியன் டாலர் (ரிம. 2.9 மில்லியன்) அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker