Latestசினிமா

என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே:- நடிகர் சூரி!

சென்னை,செப்.23- நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவின் முதல் நிலை காமெடியன்களில் ஒருவர். அவர் தொடர்ந்து பல நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். மேலும் அவர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூரி தான் சினிமாவுக்கு வருவதற்கு முன் பட்ட கஷ்டம் பற்றி பேசியுள்ளார். குடும்பத்தில் வறுமை நிலவிய நிலையில் தான் சினிமாவில் நன்றாக சம்பாதிக்கலாம் என எண்ணி சென்னை வந்தாராம்.

தொடர்ந்து பலரை சந்தித்து வேலை தேடினேன், ஆனால் யாரும் வேலை கொடுக்க தயாராக இல்லை.  வீடு வாடகை கொடுக்க வேண்டும், அதனால் குப்பை மண் அள்ளும் ஒரு லாரி கிளீனராக வேலைக்கு சேர்ந்தேன்.

“ஒரு முறை அம்மா என்னிடம் போனில் பேசும்போது ‘சாப்பிட்டியா?’ என கேட்டார். ‘நான் எங்க சாப்பிட்டேன்.. பச்சை தண்ணி குடிச்சிட்டு படுத்திருக்கேன்’ என கூறினேன். அவர் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். மயங்கி விழுந்துவிட்டார்” என சூரி கூறியுள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker