Latestமலேசியா

கடத்தல் முயற்சியில் தப்பினார்- மாணவி

கங்கார், செப். 23 – கம்போங் தோக் கண்டாங்கில் நேற்று காலையில் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பினார் மாணவி ஒருவர்.

இச்சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் அந்த மாணவி வீட்டின் முற்றத்தில் இருந்தபோது, பெரோடுவா விவா காரில் மூவர் அங்கு வந்திருக்கின்றனர்.

காரில் இருந்து இறங்கிய இருவர் அந்த மாணவியை நெருங்கிய வேளையில், திகிலடைந்த அந்த மாணவி, வெளியே ஓடி அண்டை வீட்டில் புகுந்து உதவி கோரியிருக்கிறார்.

அதைக் கண்ட அந்த ஆடவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதன் பின்னர் அந்த மாணவி அது பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார்.

துரிதமாகச் செயல்பட்ட போலீசார், 24இல் இருந்து 58 வயதுடைய மூவரை சிம்பாங் அம்பாட்டில் காரில் இருந்தபோது, கைது செய்தனர்.

சோதனையில், அதில் இருவருக்கு இதற்கு முன்னர் குற்றப்பதிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு குற்றவியல் சட்டம், பிரிவு 363/511இன் கீழ் விசாரணை செய்யப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker