Latestமலேசியா

காகித ஸ்ட்ரோவ் – நெஸ்லே நிறுவனம் அறிமுகப்படுத்தும்

கோலாலம்பூர், செப். 23 – நெஸ்லே மலேசியா நிறுவனம் தனது பாக்கெட் சுவைநீருக்கு காகித ஸ்ட்ரோக்களை (உறிஞ்சான்கள்) வெளியிடும் என அறிவித்துள்ளது.

இதன் மூலம் தனது யுஎச்டி 125 மில்லி லிட்டர் சுவைநீர் பாக்கெட்டுகளுக்காக அந்நிறுவனம் தயாரிக்கும் 20 கோடி சாதாரண ஸ்ட்ரோக்களுக்குப் பதிலாக அந்தக் காகித ஸ்டிரோக்கள் அமையும் என அதன் தலைமை செயல்முறை அதிகாரி ஜுவான் அரனோல்ஸ் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு வாக்கில் அம்மாதிரியான ஸ்ட்ரோக்களை மறுசுழற்சி செய்யும் வகையில் தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.

தற்போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்களுக்குப் பதிலாக சுற்றுச் சூழலுக்கு உகந்த உறிஞ்சான்களை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker