Latestமலேசியா

கார் மோதி அமெரிக்க சுற்றுப் பயணி – கொல்லப்பட்டார்

கூச்சிங், செப். 23 – ஜாலான் பாடுங்கானில் எம்பிவி காரினால் மோதப்பட்ட அமெரிக்க சுற்றுப்பயணி, கூச்சிங் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிகாலை 12.10 மணியளவில் அந்த 62 வயது அமெரிக்கர் தமது 48 வயது மனைவியுடன் சாலையைக் கடக்கும்போது, கூச்சிங் பார்க் ஹோட்டலிலிருந்து ஶ்ரீஅமானுக்குச் செல்லும் சாலையின் சுற்றுவட்டத்தில், 26 வயது உள்ளூர் ஆடவர் ஓட்டிவந்த காரினால் மோதப்பட்டதாக சரவாக் போக்குவரத்து அமலாக்க இலாகா தலைவர் அலெக்சன் நாகா சாபு தெரிவித்தார்.

கொல்லப்பட்டவரின் மனைவிக்கு வலது கட்டை விரலில் முறிவு ஏற்பட்டு கூச்சிங் கேபிஜே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கார் ஓட்டுநருக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. மருத்துவப் பரிசோதனையில் அவர் மது போதையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த வழக்கு போக்குவரத்துக் குற்றம், பிரிவு 41இன் கீழ் விசாரணை செய்யப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker