Latestமலேசியா

நிர்வாண நிலையில் ஆடவரின் சடலம்-போர்ட்டிக்சன் கடற்கரையில் கண்டுபிடிப்பு

போர்ட்டிக்சன், செப். 23 – போர்ட்டிக்சன் கடற்கரையில் பந்தாய் பத்து 1வில் ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நிர்வாண நிலையில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் அந்தச் சடலத்தை கைப்பற்றி பரிசோதித்ததில், பிசிஜி தடுப்பூசி அல்லது காயம் எதுவும் சடலத்தில் காணப்படவில்ல்லை.

முகச் சாயலை வைத்துப் பார்க்கும் போது, அது சீனருடையதாகத் தெரிவதாகப் போர்ட்சிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக போர்ட்டிக்சன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடும்பத்தில் காணாமல் போனோர் இருந்தால், அது பற்றி போர்ட்டிக்சன் போலீஸ் நிலையத்தில் 06-6472222 எனும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்,

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker