Latestமலேசியா

பயன்படுத்த முடியாத கஞ்சில் கார்- பறிமுதல்

கோம்பாக், செப். 23 – கோலாலம்பூர்-ஈப்போ சாலையின் 15ஆவது கிலோ மீட்டரில் பயன்படுத்துவதற்கு முடியாத மிகவும் மோசமான நிலையில் இருந்த கஞ்சில் கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்தக் கார் சாலையின் ஓரத்தில் கண்டு பிடிக்கப்பட்டபோது அதன் ஓட்டுநர் அதனருகில் இருந்தது காணப்பட்டது.

பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், நேற்று காலை 10 மணியளவில் அது பறிமுதல் செய்யப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் அர்ஷாட் கமாருடின் தெரிவித்தார்.

அந்தக் கார் மற்ற பயணிகளுக்கு ஆபத்தை உண்டாக்கும் அளவில் இருந்ததன் வீடியோ பதிவு வைரலாகப் பகிரப்பட்டதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார், பரிசோதனையில் அந்தக் காருக்கான சாலை வரி கடந்தாண்டு செப்டம்பர் 10ஆம் தேதி காலாவதியானதாகவும் அதன் ஓட்டுநருக்கு காரோட்டும் உரிமம் இல்லை எனவும் தெரிவித்தனர்.

அந்தக் கார் குடும்பத்தின் 75 வயது உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும் தெரிய வந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker