Latestமலேசியா

பார்வையற்ற சகோதரிகள் கல்வியில் இமாலய சாதனை

பினாங்கு, செப். 23 – சரவாக்கைச் சேர்ந்த பார்வையற்ற சகோதரிகளின் கடின உழைப்பால் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின்(யுஎஸ்எம்) 57ஆவது பட்டமளிப்பு விழாவில் தங்களின் இளங்கலை பட்டத்தைப் பெறவிருக்கின்றனர்.

பெலிசியா புய் ஜியா இன்(24) என்பவரும் அவரது தங்கை ஆண்டிரியா(23) ஆகியோர் பினாங்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தங்களது பட்டத்தைப் பெறவிருக்கின்றனர்.

இதனிடையே ஃபெலிசியா ஆங்கில மொழி மற்றும் மொழி பெயர்ப்புத் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான யுஎஸ்எம்மின் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அவர் ஜிஜிபிஏ எனும் ஒட்டுமொத்த 3.76 புள்ளிகளைப் பெற்று அந்தச் சாதனையைப் புரிந்துள்ளார். ஆண்டிரியா அதே துறையில் மனோவியல் பாடத்தைத் துணைப் பாடமாக எடுத்து ஒட்டுமொத்த சிஜிபிஏயில் 3.36 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

தங்களின் வெற்றிக்கு சகோதரிகள் ஒருவருக்கு ஒருவர் உதவி புரித்து விரிவுரையாளர்களின் ஊக்குவிப்போடு வெற்றி பெற்றதாகக் கூறுகின்றனர்.

அவர்களிருவரும் கல்வி சார்ந்த துறையோடு பியானோ மற்றும் இசை சார்ந்த பயிற்சியையும் பெற்றிருக்கின்றனர்.

சகோதரிகள் இருவரும் தொடர்ந்து முது கலைக் கல்வியைத் தொடரப் போவதாகவும் ஃபெலிசியா மொழி பெயர்ப்புத் துறையிலும் ஆண்ட்ரியா இசை ஆசிரியையாகவும் தொழில் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker