Latestமலேசியா

புதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை

கோலாலம்பூர் செப் 23- புதிய பட்ஜெட்டில் சிறு தொழில் துறையினருக்கு உதவுவதோடு வேலை வாய்ப்பிற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

பட்டதாரிகள் உட்பட அதிகமான இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டுக்கான புதிய வரவு செலவுத்திட்டம் அமைந்திருக்கும் என லிம் தெரிவித்தார்

இப்போதைய சிரமமான காலத்தில் சிறு தொழில் துறையினருக்கு உதவுவது மற்றும் நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கான வேகமான திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் புதிய வரவு செலவு திட்டம் அமையும் என அவர் சொன்னார்.

புதிய வரிகள் எதனையும் அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிந்துரை செய்யாது. தொழில்துறை வரியை
உயர்த்துவது உலகளாவிய பாணியாக இருந்தாலும் இம்முறை அரசாங்கம் இதற்கு ஆலோசனை தெரிவிக்காது என்றும் அவர் சொன்னார்.

இப்போதைய நிதி நிலைமயில் நாம் இவ்வாறு செய்வது சிரமமாகும்.ஆனால் பொருளாதாரம் அனுமதிக்கும்போது வரியை அதிகரிப்பதில் தீவிர கவனம் செலுத்துவோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

1எம்டிபி , தாபோங் ஹாஜி எனப்படும் யாத்திரிக நிதி மற்றும் பெல்டா போன்ற பல்வேறு ஊழல்களால் 15 ,000 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டிருப்பதால் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் இப்போதைய கவனம் இருப்பதாக அவர் கூறினார்.

அக்டோபர் 11ம் தேதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை லிம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார். இதனிடையே தீர்வையற்ற வர்த்தகப் பகுதி ஒன்றை உருவாக்க வேண்டும் என நெகிரி செம்பிலான் அரசாங்கம் செய்துள்ள விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. ஜனநாயக செயல் கட்சியின் நெகிரி மாநில 20 ஆவது மாநாட்டில் உரையாற்றிய போது லிம் இதனைத் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker