Latestமலேசியா

மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் 60ஆம் ஆண்டு வைரவிழா & 33ஆவது பேரவைக்கதைகள் நூல் வெளியீட்டு விழா.

கோலாலும்பூர், செப்23-  மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை தனது 60ஆம் ஆண்டு வைரவிழாவினையும் 33ஆவது பேரவைக்கதைகள் நூல் வெளியீட்டு விழாவினையும் ஒருசேர மிகவும் விமரிசையாக நடத்தியது. இந்நிகழ்விற்கு பேராசிரியர் டான்ஶ்ரீ டத்தோ டாக்டர் த. மாரிமுத்து அவர்கள் சிறப்பு பிரமுகராக கலந்து சிறப்பித்தார். 1959ஆம் ஆண்டு இந்திய ஆய்வியல் துறையின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்ப்பேரவையானது அதன் அடிப்படை நோக்கம் மாறாமல் 60 ஆண்டு காலம் பயணித்து இவ்வருடம் 60ஆம்  ஆண்டு எட்டியதை மலேசிய தமிழர்களின் வரலாற்று சுவடுகளில் பொறிக்கப்பட வேண்டிய சரித்திரமாகும் என்று தமிழ்ப்பேரவையின் தலைவர் சிவம் தமிழ்ச்செல்வம் தெரிவித்தார்.

மேலும், மலேசியத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் பேரவைக்கதைகள் மிகப்பெரிய பங்கினை பன்னெடுங்காலமாக கொடுத்துள்ளது. அதோடு, ஓர் எழுத்துப் பரம்பரையைக் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கி இலக்கிய வளர்ச்சிக்குத் துணை நின்றுள்ளது என்று 33ஆவது பேரவைக்கதைகளின் இயக்குநர் திலாஷினி இராஜகோபால் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், தமிழ்ப்பேரவையின் வரலாற்றிலேயே மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனை என்றும் மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் கூறினார். 33ஆவது பேரவைக்கதைகள் சிறுகதை போட்டியின் தலைமை நீதிபதியாக இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரிய முறையில் சிறப்பாக நடந்தேறிய இந்நிகழ்விற்கு அரணாக நின்ற 60ஆம் ஆண்டு வைர விழா இயக்குநர் சுகுனன் அவர்களுக்கும் 33ஆவது பேரவைக்கதைகளின் இயக்குநர் திலாஷினிக்கும் மற்றும் அனைத்து மாணவர்கள் மற்றும் செயலவை உறுப்பினர்களுக்கும் தமது நன்றிகளைத் தமிழ்ப் பேரவையின் தலைவர் சிவம் தமிழ்ச்செல்வம் கேட்டு கொண்டார்.

‘வைர ஆண்டுப் பேரவை வையகம் போற்றும் சிறுகதை’.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker