Latestமலேசியா

மோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்

ஜோகூர் பாரு, செப். 23 – பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினரின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் 7 மோசடி குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டார்.

எஸ்.சஸ்வின் நாயர்(27) மீது 39,450 ரிங்கிட பெறுமான கட்டுப்படி விலை வீடு, தங்க நகை, பள்ளிக்கான வவுச்சர் ஆகிய மோசடிகளில் சம்பந்தப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கட்டுப்படி விலையிலான வீடுகளுக்கு மூவரிடமிருந்து பெறப்பட்ட ரிம. 9,150, ரிம.7,000 மற்றும் ரிம. 8,000ஐ மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தக் குற்றங்கள் இஸ்கண்டார் புத்ரி, தாமான் நூசா ஜெயா மற்றும் தாமான் செத்தியா டுரோப்பிகானாவில் நவம்பர் 22லிருந்து டிசம்பர் 25 வரை புரிந்தததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

ஜூலை 27இல் தங்க நகைகளுக்கு முன்பணமாக நபர் ஒருவர் கொடுத்த ரிம. 15,000ஐ மோசடி செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சூங் அளித்த இரு மாணவர்களுக்கான தலா ரிம. 150 பள்ளி உதவி நிதியை மோசடி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

14,000 ரிங்கிட் பிணையில், இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் சஸ்வின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வழக்கின் மேலாண்மை அக்டோபர் 23இல் செவிமடுக்கப்படும். அவருக்கு வழக்கறிஞர் இஸ்கண்டார் ஷா இப்ராஹிம் ஆஜரானார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker