Latestமலேசியா

அபிராமிக்கு மரணம் விளைவித்த 3 சந்தேக பேர்வழிகள் கைது


ஈப்போ, செப்.24 – புந்தோங்கில் ஜாலான் நியூ டெல்லியில் குடும்ப மாது அபிராமிக்கு மரணம் விளைவித்த தொடர்பில் 3 இந்திய ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அந்த மூவரும் 25 – 27 வயதுக்கு  உட்பட்டவர்கள் என போலீசார் வெளியிட்ட அறிக்கையில்  கூறப்பட்டது. நேற்று மாலை மணி 4.30 அளவில் ஈப்போ வட்டாரத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு அபிராமிக்கு வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மகனின் காரை அடித்து நொறுக்கிய போது அபிராமி மயங்கி விழுந்து இறந்தார். அபிராமியை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர்  மீண்டும் அவரது வீட்டிற்கு வந்த அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை  அடித்து  நொறுக்கியதோடு  அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டிற்கு தீ வைத்தாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக  போலீசில் புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து தீவர விசாரணைக்கு பின்னர் மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அபிராமிக்கு  நோக்கம் இல்லாமல் மரணம் விளைவித்த குற்றத்திற்காக  குற்றவியல் சட்டதின் 304 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker