Latestமலேசியா

ஈப்போவில் கிரஞ்ஜிட் சிங் கொலை – பொறாமை காரணமா?

ஈப்போ, செப். 24 – ஈப்போவில் ஆடவர் ஒருவர் உடலில்  கடுமையான கத்திக் குத்து காயங்களுடன்  சாலை ஓரத்தில் இறந்து கிடக்க காணப்பட்டார்.  நேற்று இரவு 8.05 மணி அளவில்   அந்த  ஆடவரின் உடல் மீட்கப்பட்டதாக ஈப்போ மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் முகமட் நோர்டின் தெரிவித்தார்.

45 வயது கிரஞ்ஜிட் சிங் என்று அடையாளம் காணப்பட்ட அந்த  ஆடவரின் உடலின் முன்புறம் மற்றும் பின்புற பகுதியில் ​​கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட  காயங்கள் இருந்தன.

அவரது உடல் லாப்பாங்கான் சைபர் 1,  பாண்டார் சைபர் பொட்டானி எனும் இடத்தில் உள்ள மூன்று மாடிக்கொண்ட கடை வரிசை முன் புறம் கண்டுபிடுக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு ரத்த வெள்ளத்தில் கிரஞ்சிட் சிங் இறந்து கிடந்ததை கண்டனர்.

சம்பவ இடத்தில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எதுவும்  பறிமுதல் செய்யப்படவில்லை. சவப் பரிசோதனைக்காக  ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவ மனைக்கு  கிரஞ்சிட் சிங் உடல் கொண்டுச்செல்லப்பட்டது.

போலீசார் மேற்கொண்ட தொடக்க விசாரணையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் வர்த்தகம் ஒன்றை தொடங்க கிரஞ்சிட் சிங் கடையை வாடகைக்கு எடுத்ததாக தெரிகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை  போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த  விவகாரம் தொடர்பில்

குற்றவியல் பிரிவு 302 கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker