Latestஉலகம்

கழிவறை கிண்ணத்தில் – சிசுவின் சடலம்

குவாந்தான், செப். 24 – குவாந்தான் மத்திய பேருந்து முனைய கழிவறையின் கிண்ணத்தில் சிக்கிக் கொண்டிருந்த சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று காலை, அந்தப் பேருந்து முனையத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் குவாந்தான் மாநகர் மன்றத்தின் அதிகாரி காலை 9.50 மணிக்குச் சென்றபோது, கழிவறை கிண்ணத்தில் ரத்தம் கலந்து நீர் இருப்பதைக் கண்டுள்ளார். அந்தக் கழிவறை பழுது பார்ப்பதற்காக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மூடப்பட்டிருந்தது.

துப்புரவுப் பணியாளர் அந்தக் கிண்ணத்தைச் சோதனை இட்டபோது, அதில் ஒரு சிசுவின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மேலதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவினை சோதனை இட்டபோது, அன்று காலை 5.58 மணியளவில் ஒரு கருப்பு உடையணிந்த பெண், பொட்டலம் ஒன்றோடு அதனுள் நுழைந்தது காணப்பட்டது.

அந்தப் பெண் கழிவறையில் அரை மணி நேரத்துக்கு மேல் இருந்துள்ளார். அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

பிரேத பரிசோதனையில், அந்தச் சிசு பிறந்து ஒரு மாதமே ஆகியிருக்கும் என நம்பப்படுகிறது. இந்த வழக்கு குற்றவியல் சட்டம், பிரிவு 318இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. அது பற்றி தகவல் அறிந்தோர், போலீசிடம் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker