Latestமலேசியா

காணமல் போனதற்கு முன்னதாக நெருக்கடியில் இருப்பதாக சகோதரிக்கு தகவல் தெரிவித்த மோகனாம்பாள்


கோலாலம்பூர், செப்.24 – காணாமல் போவதற்கு முன்னதாக தாங்கள் நெருக்கடியில் இருப்பதாக போலீஸ் நடவடிக்கையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஜனர்தானின் மனைவி மோகனம்பாள் அவரது சகோதரி வசந்திக்கு குறுந்தகவல் மூலம் தகவல் அனுப்பி இருக்கிறார். அதோடு, அன்றைய தினம் இரவு தாங்கள் இருந்த இடத்தின் LOCATION-னை பகிர்ந்திருப்பதாக மோகனம்பாள் குடும்ப வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் தெரிவித்தார்.

செப்டம்பர் 14 தேதி, ரவாங் பத்து ஆராங்கில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பிரிட்டனின் நிரந்தர குடியிருப்பு வாசி தகுதியைப் பெற்றிருந்த ஜனார்தனன் விஜயரத்னம் மலேசியாவைச் சேந்த தவசெல்வம் கோவிந்தசாமி, மகேந்திரன் சந்திரசேகரன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சம்பவத்திற்கு முதல் நாள் அன்று அந்த மூவரோடு மோகனம்பாளும் இரவு உணவு உட்கொள்ள சென்றதாக அவர்களது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.  சுட்டுக் கொல்லப்பட்ட மூவரின் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஆனால், அவர்களுடன் உணவு அருந்த சென்ற மூன்று பிள்ளைகளுக்குத் தாயான மோகனம்பாளின் நிலை இன்னமும் தெரிய வில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பது இன்னமும் ஒரே மர்மமாக இருக்கிறது.

இந்த நிலையில், அவரது மூன்று பிள்ளைகளும் திட்டமிட்டபடி இன்று பிரிட்டன் புறப்படுவதற்கு முன்னதாக மோகனம்பாளை கண்டு பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என மனோகரன் மலையாளம் கேட்டுக் கொண்டுள்ளார்.
போலீஸ் நடவடிகையினால் தந்தையைப் பறிக்கொடுத்த அந்த 3 பிள்ளைகளும் தங்களுது தாய்க்கு என்ன நடந்தது என்ற குழப்பதிலும் வேதனையிலும் இருக்கின்றனர்.

மோகனம்பாளின் கணவர் ஜனார்தனன் அவரது சகோதரர் தவசெல்வம் ஆகியோர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் உறுதியாக நம்புகின்றனர் என மனோகரன் தெரிவித்தார். ஏற்கெனவே இது குறித்து அவர்களது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் கொள்ளை மற்றும் குண்டர் கும்பலில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அவர்கள் பயணம் செய்த காரை துரத்திச் சென்ற போது அவர்களை கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். 

ஆனால், இதனை குடும்பத்தார் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். ஜனார்தனன் அவர்களது மனைவி மோகனம்பாள் மற்றும் 3 பிள்ளைகள் ஆகஸ்ட் மாதம் 27 தேதிதான் மலேசியாவிற்கு வந்து சேர்ந்தனர். அப்படி இருக்கும் போது ஜனார்தனன் மலேசியாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பது தங்களால் ஏறுக் கொள்ள முடியவில்லை என அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker