Latestமலேசியா

சுட்டுக் கொல்லப்பட்ட நால்வர் “ஶ்ரீ” கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் –போலீசார் தகவல்

கோலாலம்பூர், செப்.24 – சைபர் ஜெயவில் sky park அடுக்குமாடி குடியிருப்பு கார் நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நால்வர் ஶ்ரீ கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் என போலீசார் உறுதிபடுத்தினர். சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் 21 குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டதாக  இந்த நால்வரும் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்களாவர்.

29 மற்றும் 49 வயதிற்கு உட்டபட்ட அந்த நால்வரும் செராஸ் தாமான் செகார் பெர்டானாவில் நேர்று காலை 7.15 மணியளவில் ஒரு வீட்டில் புகுந்து கொள்ளையிட்டதோடு அவ்வீட்டிலிருந்து மெர்சிடிஸ் கார்  ஒன்றையும் கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

ஶ்ரீ கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் தமது வீட்டிற்குள் புகுந்து கொள்ளை அடித்த போது தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை லிங் லிங் செய்தியாளர்களிடம் விவரித்துள்ளார். “நான் வேலைக்கு செல்வதற்கு தயாராக இருந்ததோடு எனது மகனின் பள்ளி பேருந்திற்காக  காத்திருந்தேன். எங்கள் வீட்டின் கண்ணாடி கதவுற்கு அருகே உருவத்தை கண்டு அத்ர்ச்சி அடைந்தேன் என 40 வயதுடைய லிங் லிங் தெரிவித்தார்.
காலை 7.54 மணியளவில் எனது கணவர், தாயார் மற்றும் மகனும் வீட்டின் வரவேற்பு அறையில் இருந்தனர். முதலில் முகமூடி அணிந்த 2 ஆடவர்கள் 2 பாராங்கத்தியுடனும் ஒரு இரும்புடனும் உள்ளே நுழைந்தனர். அவர்களை தொடர்ந்து முகமூடி இல்லாமல் மற்றொரு நபரும் வீட்டினுள் வந்தார். எங்கள் அனைவரையும் வீட்டின் வரவேற்பு அறையில் கத்தி முனையில் வைத்து மிரட்டினர்.
பிறகு, 3 ஆடவர்கள் வீட்டின் மேல் மாடிக்கு சென்று எங்களுக்கு சொந்தனமான பொருட்கள் மற்றும் எனது கணவரின் மெர்சிடிஸ் காரையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். முகமுடி அணியாமல் இருந்த ஆடவன் VOLKWAGEN PASSAT காரில் வந்தாக லிங் லிங் கூறினார். இவர்கள் அங்கிருந்து தப்பியவுடன் தான் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தாக அவர் சொன்னார்.
எனினும் 2 மணி நேரத்திற்கு  பிறகு அந்த 4 கொள்ளையர்களையும் சைபர் ஜெயா sky park  அடுக்குமாடி குடியிருப்பு கார் நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதைக் குறித்து தாம் நிம்மதி பெருமூச்சு விடுவதாக அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker