Latestமலேசியா

செண்டோல் கடையில் கொள்ளை – நபர்கள் தேடப்படுக்ன்றனர்

கோலாலங்காட், செப். 24 – இரண்டு திருடர்கள் பந்திங், ஓலாக் லெம்பிட் எனும் இடத்தில் உள்ள செண்டோல் கடையில் புகுந்து கொள்ளையடித்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடியில் பதிவாகி உள்ளது.

ஒரு நிமிட நேரம் ஓடும் அந்த வீடியோ பகிரப்பட்டு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடையின் மேசைக்கடியில் பதுங்கியிருந்த அந்தத் திருடர்கள், அங்கிருந்த பணப் பெட்டியையும் வரவு வைக்கும் கருவியையும் களவாடிச் சென்றுள்ளனர்.

இது பற்றித் தங்களுக்குப் புகார் எதுவும் கிடைக்கவில்லை. அந்தக் கடையின் உரிமையாளர் விரைவாகப் புகார் தெரிவிக்கும்படி கோலாலங்காட் போலீஸ் தலைவர் அஸிஸான் துக்கிமான்  கேட்டுக் கொண்டார்.

அந்த இரு திருடர்களையும் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker