Latestமலேசியா

தொழிற்சாலையில் வெறியினால் தாக்கப்பட்ட இந்திய பெண் மரணம்

ஜார்ஜ் டவுன் செப் 24 – பாயன் லெப்பாஸ் தொழிற்பேட்டை பகுதியில் பி “பிரவ்ன் ” என்ற தொழிற்சாலையில் புகுந்த வெறியனால் கடும் தாக்குதலுக்கு உள்ளான இந்திய பெண்மணி ஒருவர் மாண்டார்.

தலை, ,கழுத்து மற்றும் கையில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் பினாங்கு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  48 வயதுடைய அந்தப் பெண்  மரணம் அடைந்தார் என தென் மேற்கு மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரண்ட் எ.எ. அன்பழகன் உறுதிப்படுத்தினார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த  53 வயது தொழிற்சாலையின்  மற்றொரு ஊழியர்  சீரான நிலையில்  இருப்பதாக கூறப்பட்டது .

நேற்று மாலை 4.45  மணி  அளவில் அந்த தொழிற்சாலைக்குள் புகுந்த 25 வயது சாய்க் முகமட் கைரில் என அடையாளம் காணபட்டுள்ள ஆடவன் அங்கிருந்த இரண்டு தொழிலாளர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளான்.

இந்த சம்பவம் அறிந்து உடனடியாக  அங்கு விரைந்த போலீசார் சம்பந்தப்பட்ட அந்த ஆடவனை  சரணடையும்படி  கேட்டுக்கொண்டனர் . ஆனால்  அந்த ஆண்டவன்  தன்னிடமிருந்த ஆயுதத்தினால்  போலீசாரை நோக்கி  தாக்க முயன்றபோது  போலீசார்  தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக  அவனை  சுட்டுக் கொன்றனர்.

அந்த ஆடவன் தொழிற்சாலையின் தர கட்டுப்பாட்டு பகுதிக்கு நுழைந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பெண் அதிகாரியை தாக்கியதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகராறு ஏற்படும் சத்தத்தைக் கேட்டு உடனடியாக அந்த தொழிற்சாலையின் பாதுகாப்பு அதிகாரி அங்கு வந்துள்ளார். அப்போது அவரையும் அந்த ஆடவன் தாக்கியிருக்கிறான்.

தாக்குதல் நடத்திய  ஆடவன் அந்த தொழிற்சாலையின் முன்னாள் ஊழியர் எனவும் தெரியவந்துள்ளது. இரண்டு ஆண்டுகாலம் அந்த தொழிற்சாலையில் வேலை செய்தபோது அந்த ஆடவன் பெரும்பாலான நேரங்களில் அங்குள்ள அறையில் தனியாகவே இருந்து வந்ததாகவும் போலீசார் கூறினர்.

குற்றவியல் சட்டத்தின் இரண்டாவது விதியின் கீழ் கொலை  மற்றும் கொலை முயற்சியை மேற்கொண்டதற்காக 307வது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker