Latestமலேசியா

நாட்டின் புகைமூட்டம் – காலை 7 மணியளவில் முன்னேற்றம்

கோலாலம்பூர், செப். 24 – நேற்று பின்னிரவுக்குப் பின்னர் நாடு முழுமைக்கு காற்றின் மாசுக் குறியீடு முன்னேற்றம் அடைந்து வருவதாக வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நாடாளாவிய நிலையில் அந்தக் குறியீடு சுகாதாரமற்ற நிலையில்தான் உள்ளது.

நேற்று, கிள்ளான் ஜோஹான் செத்தியாவில் மாசுக் குறியீடு 203 ஆக இருந்த வேளையில், இன்று காலையில் அது 168 ஆகக் குறைந்துள்ளது. கூச்சிங்கிலும் சமராஹானிலும் குறியீடு 70-80 ஆக மிதமான நிலையில் உள்ளது.

இன்று அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல திறக்கப்பட்டதாகக் கல்வி இலாகாவின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker