Latestமலேசியா

வன விலங்குகள் வீடுகளுக்குப் படையெடுப்பது – அதிகரிப்பு

கிள்ளான், செப். 24 – தற்போது நிலவும் வெப்பமான சீதோஸ்ண நிலையில் வன விலங்குகள் நிழல் தேடி வீடுகளுக்குப் படையெடுப்பது அதிகரித்து வருகிறது.

105 எனும் தொலைபேசி வழியாகத் தீயணைப்பு, மீட்புப் படைக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் நாளொன்றுக்கு 4லிருந்து 5 ஆக அதிகரித்துள்ளதாகக் கிள்ளான் தீயணைப்பு, மீட்புத் தலைவர் சம்சோல் மாரிஃப் சைமானி தெரிவித்தார்.

பாம்புகள், மூசாங் பூனைகள், உடும்பு, குரங்குகள் மற்றும் காட்டுப் பூனைகளைப் பிடித்து உதவும்படி தொலைபேசி அழைப்புகள் வருவதாக அவர் தெரிவித்தார்.

ஆகஸ்டு மாதத்தோடு ஒப்பிடும்போது, உதவி கேட்டு வரும் அழைப்புகள் 40 விழுக்காடு அதிகரித்துள்ளன. வெப்பத்தின் காரணமாகக் காட்டு விலங்குகள் மனிதர்களை மூர்க்கத்தனமாக தாக்கும் அபாயம் இருப்பாதாக அவர் தெரிவித்தார்.

பாம்புகள் பெரும்பாலும் அலமாரி, நாற்காலிகள், சமயலறை, குளியலறை முதலியவற்றின் இடுக்குகளில் பதுங்கி இருக்கும்.

செப்டம்பர் மாதத்தில் வழக்கத்துக்கு மாறாக 45 கிலோ கிராம் எடை கொண்ட மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது. பாம்புகள் வீடுகளில் புகுந்தால் அதனை அச்சுறுத்தாமல் தீயணைப்புப் படைக்குத் தெரிவிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker