Latestமலேசியா

சகோதரர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமி

ஜகார்த்தா,செப் 26-  கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐந்து வயது சிறுமியை இரு வளர்ப்பு சகோதரர்கள் கற்பழித்து கொலை செய்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவத்திற்கு அந்த சிறுமியின் 39 வயது வளர்ர்பு தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். அந்த இரு சகோதரர்களும் தங்களின் தாயுடனும் உடலுறவு வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இந்தோனேசியாவின் சுகாபூமி நகரிலுள்ள கோத்தா சுகாபூமியில் ஒரு குடும்பத்தில் வளர்ப்பு பிள்ளையாக அந்த சிறுமி இருந்ததாக போலீஸ் அதிகாரி நஸ்ரியாடி கூறினார். 16 மற்றும் 14 வயது இரு சகோதரர்களும் கடந்த மூன்று மாத காலமாகவே அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று அந்த சிறுமி இறக்கும் வரை கழுத்து நெறிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு, அச்சிறுமியை அவரது இரண்டு சகோதரர்கள் கற்பழித்துள்ளனர். அதன் பிறகு, தங்களது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றில் அச்சிறுமியின் உடலைத் தூக்கி வீசியுள்ளனர்.
மீன் பிடிக்க சென்ற ஒருவர் ஆற்றில் சிறுமியின் சடலம் மிதப்பதைக் கண்டு போலீசில் புகார் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட இரண்டு சிறுவர்களும் அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.
/////
30 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சிறுமி – தந்தை உடந்தை

மல்லபுரம் செப் 26 – 12 வயது சிறுமியை கேரளாவில் 30 பேர் சேர்ந்து கற்பழித்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செலரி மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த கொடுமையில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஏழாம் வகுப்பு மாணவியாவார்.
சம்பந்தப்பட்ட அந்த சிறுமியின் தந்தையும் இந்த கொடூரச் செயலுக்கு உடனிருக்க  அந்த 30 பேரும் அந்தச் சிறுமியை  கற்பழித்துள்ளனர்.

இதுதொடர்பாக திருரங்கடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்ட விதி உட்பட பல்வேறு சட்ட விதியின் கீழ் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இச்சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய  அஷ்ராப் முகமட் குட்டி,,38 வயதுடைய கருப்பன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கு அச்சிறுமி அடிக்கடி மட்டும் போடுவதும் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட  நிலையிலும் இருந்துள்ளதை தொடர்ந்து அவருக்கு கவுன்சலிங் வழங்கப்பட்டது. அச்சமயத்தில்தான் இக்கொடூரச் சம்பவம் அம்பலமாகியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker