Latestவாழ்க்கை

எங்களை சாகடித்து பணம் சம்பாதிக்கிறார்கள் :-நடிகை ரேகா

சென்னை,செப்.27-ஜி.வி.பிரகாஷின் ‛100% காதல்’ படத்தில் நடித்துள்ள நடிகை ரேகா பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், ‛உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனு, கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனு இருந்தால் வாழ்க்கை ஜம்முனு இருக்கும்’ என விஜய் சொன்னது போன்று தான் என் வாழ்க்கையிலும் சென்று கொண்டிருந்தேன்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு யூ-டியூப் தளத்தில் நான் இறந்தது போன்றும், என்னை புதைத்து அருகில் ரஜினி, கமல் எட்டி பார்ப்பது போன்றும் கிராபிக்ஸ் செய்து வெளியிட்டிருந்தார்கள். நான் உயிரோடு இருக்கும் போதே எனக்கு பாடை கட்டி, கற்பூரம் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள்.

சினிமா பிரபலங்களான கே.ஆர்.விஜயா, மோகன் போன்றவர்களை இப்படி சாகடித்து, அதை யூ-டியூப் மூலம் பரபரப்பை உண்டு பண்ணி பணம் சம்பாதிக்கிறார்கள். இது நன்றாகவா இருக்கிறது. இது போன்ற அதிகாரப்பூர்வமற்ற யூடியூப் தளங்களை அரசு தடை செய்ய வேண்டும் நடிகை ரேகா கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker