Latestமலேசியாவிளையாட்டு

தேசிய கராத்தே குழுவில் இருந்து ஷகிலா ஷாலினி விலகல்

கோலாலம்பூர் செப் 27 – நாட்டின் முன்னணி கராத்தே வீராங்கனையான ஷகிலா ஷாலினி  ஜெப்ரி கிருஷ்ணன் தேசிய குழுவிலிருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு   தோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில்  கராத்தே போட்டியாளர் ஒருவர்  தேர்வு  பெரும் வாய்ப்பை மலேசியா இழந்துள்ளது

தனது பயிற்சியாளர் நீக்கப்பட்ட  நான்கு நாட்களுக்கு பின்னர் தேசிய கராத்தே குழுவிலிருந்து விலகுவதாக ஷகிலா அதிர்ச்சிகரமான முடிவை அறிவித்துள்ளார். இந்த முடிவினால் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெறும்  அவரது கனவும் சிதைந்தது.

தேசிய விளையாட்டு மன்றத்தின் தலைமை இயக்குனர் அகமது இஸ்மாயிலுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தமது முடிவை 26 வயதுடைய ஷகிலா தெரிவித்துள்ளார்.

அவரது இந்த முடிவினால் நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரை மணிலாவில் நடைபெறவிருக்கும் சீ போட்டியில் தங்கப்பதக்கத்தை தற்காத்துக் கொள்ளும் வாய்ப்பையும் ஷகிலா இழந்துள்ளார்.

கடந்த வாரம் ஜப்பானில் நடைபெற்ற கே – கராத்தே போட்டிக்கு பொருத்தமான எடையை பெறுவதில் ஷகிலா தோல்வி கண்டதால் அவரது பயிற்சியாளர் அன்ரிஸ் வஷில்ஜீவை   நீக்குவது என தேசிய விளையாட்டு மன்றம் முடிவு செய்தது.

ஷகிலாவின் கோரிக்கையின் காரணமாகவே லத்வியா நாட்டைச் சேர்ந்த அந்த பயிற்சியாளரை கடந்த ஜூலை மாதம் மலேசியா தேர்வு செய்தது .கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கராத்தே குழுவினர் வெறுங்கையுடன் திரும்பியதால் பயிற்சியாளர் அன்ரிஸ் சேவையை ஏற்கனவே தேசிய விளையாட்டு மன்றம் நீக்கியது.

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதாக இருந்தால் ஷகிலா 61கிலோ எடைக்குட்பட்ட பிரிவிலிருந்து   55 கிலோ குறைவான  எடைப் பிரிவில் கலந்து கொள்வதற்கான தகுதியை பெற வேண்டும் . ஆனால் இந்த பிரிவுக்கு தகுதி பெறுவதற்கு உடல் எடையை குறைக்க முடியாத காரணத்தினால் அவர்  தேசிய குழுவில் இருந்து விலகிக் கொண்டதாக தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker