Latestமலேசியா

அடிப்பின் வழக்கில் புதிய ஆதாரம் தேவை – போலீசார் கோரிக்கை

கோலாலம்பூர், செப். 30 – மரணமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் வழக்கில் புதிய ஆதாரம் இருந்தால் அதனை பொதுமக்கள் போலீசிடன் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அது சம்பந்தமாக முன்னர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டோர் தேவை ஏற்பட்டால், மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என புக்கிட் அமான் சிஐடி துணை ஆணையர் மியோர் ஃபரிடலத்ராஸ் வாஹிட் தெரிவித்தார்.

அடிப்பின் மரணத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து கைது செய்யும் பணியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஷா ஆலாம் மரண விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி ரோஃபியா முகமட், அடிப் இருவருக்கு மேற்பட்ட நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் மரணமடைந்திருப்பதாகத் தீர்ப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker