Latestமலேசியா

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் நவம்பர் 16; வேட்புமனு தாக்கல் நவம்பர் 2

கோலாலம்பூர், அக் 1 – ஜொகூர் தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத்தின் இடைதேர்தலுக்கான திகதியை எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வாக்களிப்பதற்கான நாளாகவும் நவம்பர் 2ஆம் திகதியை வேட்பு மனு தாக்கலுக்கான நாளாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி பெர்சத்து கட்சியின் டாக்டர் முகமட் பாரீட் காலமானதைத் தொடர்ந்து அந்த நாடாளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தற்போது நிலவி வரும் அரசியல் நெருக்கடியில் இந்த இடைத்தேர்தல் முக்கியமான இடைத்தேர்தலாக கருதப்படுகிறது.

பக்காதான் ஹராப்பான் கூட்டணிக்கும் அம்னோ-பாஸ் கூட்டணிக்கும் இடையில், தற்போது நிலவி வரும் சமய ரீதியிலான விவகாரங்களும் மலேசிய அரசியலின் சூழலை மாற்றியமைத்துள்ளன.

இப்படி மாற்றம் கண்டுள்ள அரசியல் சூழ்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் இரு தரப்பினரும் தங்களின் பலத்தை காண்பிக்கும் ஒரு தளமாக மாறிவிட்டது.

இதில் யார் வெற்றி பெறுவது என்பது அடுத்த பொதுத்தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம் என்றும் ஒரு சில அரசியல் பார்வையாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.

கடந்த பொதுத்தேர்தலில் பக்காதான் ஹரப்பான் கூட்டணியின் டாக்டர் பாரிட் தேசிய முன்னணியின் வேட்பாளரை 524 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker