Latestஇந்தியா

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் – தலைவர்கள் அஞ்சலி

நியூ டில்லி, அக் 2- மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளுக்குத் இந்திய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்திய நாட்டு அதிபர் மற்றும் துணை அதிபர்களான ராம்நாத் கோவிந்த் , வெங்கையா நாயுடு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமைச்சர் பியூஷ் கோயல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் இதில் கலந்துக் கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில், “காந்தியின் 150வது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். மனித குலத்திற்கு அவர் அளித்த மிகப் பெரிய பங்களிப்பை நாம் நினைவு கூற வேண்டும். அவரது கனவை நினைவாக்க கடுமையாக உழைப்பதுடன், சிறப்பான பூமியை உருவாக்க இந்நாளில் உறுதி ஏற்க வேண்டும்”. என பதிவிட்டிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker