Latestவிளையாட்டு

2022ஆம் ஆண்டு உலக கிண்ணம்- புதிய அரங்கை பரிசோதிக்க “Club World Cup”

டோஹா, அக் 2 – கத்தார் தலைநகர் டோஹாவில் நடைப்பெறவிருக்கும் 2022ஆம் ஆண்டு உலக கிண்ண காற்பந்தாட்டத்தை முன்னிட்டு புதிதாக எட்டு விளையாட்டு அரங்கங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் மூன்றாவது விளையாட்டு அரங்கைப் பரிசோதனை செய்யும் முயற்சி நடைப்பெற்று வருகிறது.

டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் கிளப்புக்கிடையிலான  உலக கிண்ண போட்டியில் இந்த விளையாட்டு அரங்கம் பரிசோதனை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 40,000 பேர் அமரும் வசதியுடன் மத்திய டோஹாவிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இவ்விளையாட்டரங்கம் அமைந்துள்ளது.

இவ்வரங்கில் முதல் ஆட்டமாக ஐரோப்பிய வெற்றியாளர் லிவர்பூல் அணியுடன் அல்-சாட் அணி அல்லது கொன்ககாப் கண்டத்தின் வெற்றியாளர் மொந்தேரே விளையாடக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker