Latestஇந்தியா

தொடர்ச்சியாக மூவர் கொலை – கொலைக்காரனுக்கு போலிஸ் வலைவீச்சு

பிஜ்னோர், அக் 4 – டிக் டாக் செய்வதில் அதிகமாக ஈடுபட்டு வந்த ஆடவன் ஒருவன் 5 நாட்களில்  தொடர்ச்சியாக மூவரை கொலை செய்துள்ள சம்பவம் உத்திர பிரதேசம் பிஜ்னோர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 வயது அஸ்வினி குமார் ஒரு போதைப்பொருள் பித்தன். டிக் டொக் செய்வதில் ஆதிக ஆர்வம் கொண்ட இவன் நிறைய வில்லன்கள் போன்ற கதாபாத்திரங்களை நடித்து ‘I will destroy everything’, ‘Devil is ready now’ and ‘See my havoc’ போன்ற வசனங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளான்.

எந்த ஒரு குற்றப் பதிவையும் கொண்டிராத அஸ்வினி திடிரென கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி உள்ளூர் அரசியல் தலைவர் ஒருவரின் 25 வயது மகனையும் அவனது 26 வயது உறவுக்காரனையும் ஒரு தகராரின் போது சுட்டுக் கொன்றுள்ளான்.

 அங்கிருந்த தப்பித்தப் பின்னர், மூன்று நாள் கழித்து ஒரு வீட்டினுள் புகுந்து தனக்கு அறிமுக கொண்ட 27 வயது நிகிதா ஷர்மா எனும் பெண்ணையும் சுட்டுக் கொன்று அங்கிருந்து தப்பித்துள்ளான். ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் பகை இருந்தது என்றும் ஆனால் நிகிதாவுக்கு துபாயில் வேலை கிடைத்து சென்றவுடன் இது மறக்கப்பட்டது என்று அவளது குடும்பத்தினர் நம்பிருந்தனர். வெகு விரைவில் திருமணம் செய்யவிருந்த நிகிதா திடிரென அஸ்வினியால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் தனியார் துறையில் நல்ல வேலையில் இருந்த அஸ்வினி தனது போதைபழக்கத்தினால் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளான் எனவும் தெரியவந்துள்ளது.

இன்னும் தலைமறைவாகவுள்ள அச்வினியை தேடிக் கண்டுபிடிக்க போலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். தகவல் தருவோருக்கு 25,000 ரூபாய் பணமும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker