Latestஇந்தியா

சகோதரத்துவத்தை மறந்துவிடக்கூடாது – மலேசியாவுக்கு இந்தியா கோரிக்கை

புதுடில்லி, ‌‌‌‌‌‌‌‌‌‌‌அக் 5 – ஜம்மு மற்றும் காஷ்மீர் தொடர்பாக மலேசியா அறிக்கைகள் வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

வெற்றியடைந்த இதர நாடுகளைப் போல் இணைந்து கொள்வதற்கு ஒரு அம்சமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் கையெழுத்திட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி நுழைந்து அப்பிரதேசத்தை வைத்துள்ளது.

மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவை மலேசிய அரசாங்கம் எப்போதும் நினைவிl கொள்ள வேண்டும். இருநாடுகளின் நட்புறவை பாதிக்கக்கூடிய வகையில் மலேசியா எந்த ஒரு அறிக்கைகளையும் வெளியிடக்கூடாது என இந்திய வெளியுறவுத் துறையின் பேச்சாளர் ரவிஸ் குமார் கூறியதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

அண்மையில் ‌ஐநா பொது பேரவையில் உரையாற்றிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கருத்துரைத்ததை ரவிஸ் குமார் சுட்டிக்காட்டினார்.

பிரச்சினையை அமைதியாக தீர்த்துக் கொள்வதற்கு பாகிஸ்தானுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டுமென மகாதீர் கேட்டுக்கொண்டார். ஐநாவையும் அதன் சட்டத்தையும் புறக்கணிப்பது இதர வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். என்றும் அவர் நினைவு படுத்தி இருந்தார்.

பாகிஸ்தான் அல்லது இந்தியாவுக்கு சாதகமாக அவரது உரை அமைந்திருக்கவில்லை என்றபோதிலும் ஜம்மு-காஷ்மீர் வட்டாரத்தை அந்த இரண்டு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. டாக்டர் மகாதீரின் உரை பொதுவாகவே இந்தியாவை குறை கூறுவது போல். அமைந்திருந்தது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் அதிகாரத் தகுதியை வழங்கி வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவை இந்தியா அண்மையில் அகற்றியது. அந்த அதிகாரம் தற்காலிகமானது என்பதை 370வது பிரிவு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker