Latestமலேசியாவிளையாட்டு

ஒலிம்பிக் போட்டி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பாரா அன் தேர்வு !

கோலாலம்பூர்   அக் ‌‌‌‌7 – அடுத்த‌  ஆண்டு  தோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு மலேசியாவின் நடன ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பாரா  அன் தேர்வுப் பெற்றார்.

ஜெர்மனியின்  ஸ்டட்கர்ட்டில்‌ நடைபெற்ற உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் நேற்று 16வது இடத்தை பெற்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு 25 வயதுடைய பாரா தேர்வுப் பெற்றார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் மலேசியாவின் முதலாவது நடன  ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

ஆகக் கடைசியாக 2,000ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆவ்‌ லி யென் மலேசியாவின் சார்பில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொண்டார்.

ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் கலந்து கொள்ளும் மூன்றாவது  மலேசியராக  பாரா‌  திகழ்கிறார்.

அவரது பயிற்சியாளரான  இங் சூ‌ வாய்  2004 ஆம் ஆண்டு ஏதென்ஸ்  ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக் பிரிவில் கலந்து கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker