Latestசினிமா

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணம்

சென்னை, அக் 7 –  தமிழ்த் திரையுலகில் நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து நகைச்சுவையில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 55.
தவசி என்ற திரைப்படத்தில் “பின் லாடனின் அட்ரெஸ்ஸைக் கேட்கும்” காட்சியில் தோன்றி முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த கிருஷ்ணமூர்த்திக்கு கேளரா மாநிலம் குமிளி அருகே படப்பிடிப்பில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவரின் உயிர் பிரிந்தது என தெரிவிக்கப்பட்டது. இவர் தவசி, கம்பீரம், ஜோர், விக்ரம் வேதா, எலி, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இவர் விளம்பர நிறுவனம் ஒன்றில் துணை மேலாளராக பணியில் சேர்ந்து பின்பு சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவர் நடிகர் வடிவேலுவின் உற்ற நண்பராவார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker