Latestஉலகம்

கனவு “காரை” வாங்க சொந்த மகளை விற்ற அம்மா !

ஜோர்ஜியா, அக் 8 – தனது நீண்ட நாள் கனவுக் காரை வாங்க சொந்த மகளை பண்ட மாற்ற முறையில் விற்றுள்ளார் 45 வயது மாது ஒருவர். இச்சம்பவம் அமெரிக்கா ஜோர்ஜியாவில் நடந்துள்ளது.

அலிஸ் லீன் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த மாது “Plymouth Laser 1992” ரக காருக்காக 47 வயது தீனா மற்றும் 53 வயது விசோனியா தம்பதியரிடம் தனது 2 வயது மகளை விற்றுள்ளார்.

அந்தக் காரின் விலை AS$10,000 (RM41,000) ஆகும்.

அந்தச் சிறுமிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஹைய் பொய்ன்ட் வேக் போரஸ்ட் பேப்டிஸ்ட் மருத்துவமனைக்கு (Hospital High Point Wake Forest Baptist Health) கொண்டு சென்ற போது  இவர்களின் இச்செயல் அம்பலமானது.

அந்தச் சிறுமியின் உடலில் அடிபட்ட தழும்புகள் இருந்ததைக் கண்ட மருத்துவ ஊழியர் சிறார் காப்பக மையத்திற்கு புகார் அளித்துள்ளார்.

விசாரணையின் போது, தான்தான் அச்சிறுமியின் சொந்த தாய் எனக் கூறிய தீனா பின்னர் வளர்ப்புத் தாய் என வாக்குமூலத்தில் மாற்றிக் கொண்டார். இருப்பினும் சரியான  ஆவணங்களை சமர்பிக்க முடியாததால் பின்னர் உண்மை விவகாரம் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அலிஸ் லீன், தீனா மற்றும் விசோனியா தம்பதியர் ஆகியோர் மீது சட்டவிரோதமான முறையில் சிறார் விறபனையில் ஈடுபட்ட குற்றத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

அபராத தொகையை கட்ட தவறியதால் அவர்கள் மூவருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அச்சிறுமி தற்போது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பில் இருந்து வருகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker