Latestமலேசியா

குடியேறிகள் முத்திரை; நான் கருத்துரைக்க வேண்டியதில்லை – வேதமூர்த்தி

கோலாலம்பூர், அக்  8 – இந்நாட்டைச் சேர்ந்த சிறுபான்மையினரை  வந்தேறிகள் என டாக்டர் மகாதீர் முத்திரை குத்தியிருப்பது  குறித்து செய்தியாளர்கள் வினவியபோது பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி கருத்துரைக்க மறுத்துவிட்டார்.

“இது குறித்து நான் கருத்துரைக்க வேண்டிய அவசியமில்லை, கருத்துரைக்க மாட்டேன் என புத்ரா ஜெயாவில் இன்று பிற்பகலில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.பிரிட்டனிடம் இருந்து  சுதந்திரம் பெறுவதற்காக வந்தேறிகளை மலாய்க்காரர்கள் ஏற்றுக்கொண்டதாக ஞாயிற்றுக்கிழமை  காலை நடைபெற்ற   மலாய்க்காரர்களின் கௌரவம் மீதான மாநாட்டில் டாக்டர் மகாதீர் கூறியிருந்தார்

நிந்தனை ‌ அம்சங்களால் இந்த மாநாடு குறித்த உங்களது நிலையை மாற்றி இருக்கிறதா என வினவப்பட்டபோது அமைதியான முறையில் பேரணி நடத்துவதற்கு அனைவருக்கும்  உரிமை இருப்பதாக வேதமூர்த்தி தெரிவித்தார்.

அமைதியான முறையில் கூடி தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை இருப்பதாக நான் அன்றே கூறிவிட்டேன். நான் கூறியவற்றில் உறுதியாக இருக்கிறேன் என ஒற்றுமை துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரான வேதமூர்த்தி தெரிவித்தார்.

மலேசியா  மலாய்க்கார்களுக்கு சொந்தமானது என அந்த மாநாட்டின் செயலக தலைமை நிர்வாகி பேராசிரியர் ஜைனால் கிளிங் கூறியிருந்தது தொடர்பாக வினவப்பட்டபோது இதுகுறித்து சிலர் போலீசில் புகார் செய்திருப்பதாக  தாம் அறிவதாகவும்  இதனை அதிகாரிகள் முடிவு செய்யட்டும் என வேதமூர்த்தி கூறினார் .

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker