Latestஉலகம்

போலீசாரைக் காப்பாற்றிய பின்னர் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்த கும்பல்

மலாகா, அக் 8 – போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நால்வரை கடலில்  படகின் மூலம் துரத்திச் சென்ற 4 போலீஸ்காரர்கள் படகிலிருந்து கீழே விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது அவர்களைக் கடத்தல்காரர்கள் மனிதாபிமானத்தோடு காப்பாற்றியுள்ளனர். தங்களை காப்பாற்றியதற்காக அந்த கடத்தல்காரர்களுக்கு நன்றி தெரிவித்த போலீசார் பின்னர் அவர்களை கைது செய்து 80 கஞ்சா பொட்டலங்களையும் கைப்பற்றினர்.
.

கடந்த வெள்ளிகிழமையன்று போலீஸ் படகு ஒன்று அந்த கும்பலை பிடிக்க ஆயத்தமானது. விரட்டிப் பிடிக்கும் போது மற்றொரு படகுடன் மோதியதில் போலீஸ் படகு கவிழ்ந்து போலீஸ்காரர்கள் தத்தளித்தனர். ஹெலிகாப்டரில் மைக் மூலம் அந்த கடத்தல்காரர்களிடம் காப்பற்ற போலிசார் முறையிட்டனர். இதனால், அவர்கள் ஓடாமல் அந்த போலீசார்களைக்  காப்பாற்றினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker