Latestமலேசியா

அக்டோபர் 14 – SPM தேர்வு தொடங்குகிறது

புத்ராஜெயா, அக் 9 – 2019ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு இம்மாதம் அக்டோபர் 14 முதல் நவம்பர் 28ஆம் திகதி வரை நடைப்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வருடத்திற்கான தேர்வை எழுத நாடு முழுவதும் மொத்தம் 416,416  மாணவர்கள் பதிவு செய்துள்ள வேளை 3313 மையங்களில் தேர்வு நடைபெறும்.

அக்டோபர் 14 முதல் அக்டோபர் 17 வரை மற்றும் நவம்பர் 5 முதல் நவம்பர் 28 வரை என இரண்டு கட்டமாக இவ்வாண்டு தேர்வு  நடைபெறவுள்ளது.

இத்தேர்வினை கண்காணிக்க மொத்தம் 32,423 அதிகாரிகள் பணியில் அமர்த்தவுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker