Latestஉலகம்

இயற்பியலில் நோபல் பரிசு வென்ற மூன்று விஞ்ஞானிகள்

ஸ்டாக்ஹோம், அக் 9 – இந்த ஆண்டின்  இயற்பியலுக்கான நோபல் பரிசுகளைப் பெறுபவர்கள் குறித்து ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், இயற்பியலில் நோபல் பரிசுகளை மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா வாழ் கனடா நாட்டுக்காரரான விஞ்ஞானி ஜேம்ஸ் பீப்ளஸ், சுவிஸ் நாட்டை சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் மைக்கேல் மேயர், திதியர் க்யூலாஸ் ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அண்டவியல் குறித்த ஆய்வுக்காக ஜேம்ஸ் பீப்ளஸ் பாதி பரிசை பகிர்ந்து கொள்கிறார்.

இதேபோல், சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக மைக்கேல் மேயரும், மற்றும் திதியர் க்யூலாசும் மீதமுள்ள பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களுக்கான நோபல் பரிசுகள் டிசம்பர் 10ஆம் திகதி நடைப்பெறும் விழாவில்  வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker